காடை பாலினம் கண்டறிதல்
- firstlettercapital
- Aug 17, 2020
- 1 min read
Updated: Aug 18, 2020
2 வாரத்திற்கு பிறகு, காடையின் கழுத்துப் பகுதியில் உள்ள அடையாளங்களைக் கொண்டு அவற்றின் பாலினத்தை எளிதாக அறிந்து கொள்ளலாம்.
பெண் காடை:
கழுத்தின் கீழ்ப் பகுதியில் சற்று வெள்ளை நிற பின்னணியில் கருப்பு புள்ளிகள் இருக்கும்
பருவம் எய்திய பிறகு, பெண் காடை மட்டுமே முட்டையிடும்
சத்தம் எழுப்பாது
சராசரியாகப் பெண் காடையின் எடை, ஆண் காடையை விட அதிகமாக இருக்கும்
ஆண் காடை:
கழுத்தின் கீழ்ப் பகுதியில் சற்று பழுப்பு நிற பின்னணியில் புள்ளிகள் இருக்காது (4 வாரம் வரை சில புள்ளிகள் இருக்கும் பிறகு குறைந்துவிடும் ஆனால் பழுப்பு நிற பின்னணி என்றும் மாறாது)
முட்டை இடாது
சத்தம் எழுப்பும்
இதுதவிர, காடையின் பின் துவாரத்தின் அடையாளங்களைக் கொண்டும், ஆண் காடையின் சிறு நீரகத்திலிருந்து வெளியேரும் வெள்ளை நிற ஒருவகை திரவத்திலிருந்தும் அவற்றின் பாலினத்தை அறிந்து கொள்ளலாம். ஆனால், அது பருவம் எய்திய பிறகே காணமுடியும்; குளிர் காலங்களில் அத்திரவத்தினை வெளியேற்றாது.

Yorumlar